மகளிர் தினம் 2010 !!!
மானுடத்தின் உயிர்கருவே,
ஆக்கும் சக்தி உன்னிடம், அழிக்கவிடதே என்றுமே.
மேலுரிமை கோரும் மாநகர மாதர்களே, இவ்வாண்டு கிராமதுபக்கம் வந்து செல்வீர்!
நல்ல தந்தை பெற்றதனால் கள்ளிப்பால் கடந்து பள்ளிக்கூடம் போகிறோம்.
எனினும் உரிமை தாகம் உள்ளத்தில் சுரந்திருக்கும்.
நாங்கள் சிரிக்கும் சத்தம் கூட சீற்றம் விளைக்கும்.
அழுதலின் அரவம் கூடாது, அதையும் விழுங்க வேண்டும்.
அடிப்படை உரிமை கோரல்கூட அத்துமீறல் சட்டத்தில் பதிவு செய்து அரை காதம் ஓட சொல்வார் பஞ்சாயத்து தலைவர் அய்யா.
குளத்தின் சொந்தக்காரனிடம் குத்தகை கேட்பதா?
காற்றுக்கு வேலியிட்டு கட்டிபோட நினைப்பதா?
பொங்கும் கடலலையை புறங்கையால் மூடுவதா?
உலகின் உரிமம் உன்னிடம், உனக்கேன் ஒதுக்கீடு?
எனினும்,காலத்தின் கோலம் கருதி சலுகைகளை இன்று நமதாக்குவோம்,
சரித்திரம் நாளை படைத்திட.
அனுதினம் ஓர் உரிமை கோர அலுக்குது எங்கள் மனம்.
அதற்கொரு தீர்வு காண, கூட்டுமுயர்ச்சியாய் குரல் கொடுக்க,
நகரத்து சட்டத்தை கிராமத்திலும் அமலாக்க,
மேலுரிமை கோரும் மாநகர மாதர்களே,
ஒருமுறை கிராமத்து பக்கமும் வந்து போங்களேன், ஏனெனில்,
இந்தியா கிராமத்திலும் வாழ்கிறது.
வீழ்வது பெண்ணாயின் தாழ்வது சமுதாயம்!
உன்னை......
காணும் பொழுது குரிலானது,
கண்ட பொழுது இனிதானது,
காத்திருக்கும் பொழுது நெடிலாக துவங்கியது,
இதயம் துடிப்பதை (அ) துடிப்பை இரட்டிப்பாக்கியது !!!
--- கீது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக